Home / Recipes / Drumstick leaves Poricha Kuzhambu

Photo of Drumstick leaves Poricha Kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
1225
3
0.0(0)
0

Drumstick leaves Poricha Kuzhambu

Feb-19-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Drumstick leaves Poricha Kuzhambu RECIPE

முருங்கை கீரை உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் தாய்பால் அதிகம் சுரப்பதற்காகவும் ஹீமோகுளோபின் அதிகமாவதற்காகவும் இந்த முருங்கை கீரை கறி/குழம்பு செய்வார்கள். தாளிப்பதற்கு மட்டும் கால் தேக்கரண்டி நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி எண்ணெய்/ கொழுப்பு உள்ள பொருட்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை. ஆரோக்கியமான உணவு இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முருங்கை கீரை -1 கட்டு
  2. பாசிபருப்பு-1/4 கப்
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  5. பச்சையாக அப்படியே அரைக்க
  6. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  7. மிளகு -1/2 தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் -2
  9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  10. பெருங்காயம் -4 சிட்டிகை
  11. சாம்பார் பொடி -1/2 தேக்கரண்டி
  12. வெல்லம் பொடி -2 சிட்டிகை
  13. தாளிக்க
  14. நெய் -1/4 தேக்கரண்டி
  15. கடுகு -1 தேக்கரண்டி
  16. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  17. மிளகாய் வத்தல் -1
  18. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  19. பெருங்காயம் -2 சிட்டிகை

Instructions

  1. முருங்கை கீரையை உதிர்த்து நன்றாக அலம்பி எடுத்துக்கொள்ளவும். பழுத்த இலை இருந்தால் தனியே எடுத்து விடவும்.
  2. மஞ்சள் பொடி பாசிப்பருப்பு மற்றும் அளவாக தண்ணீர்சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேக வைக்கவும்
  3. அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  4. வேக வைத்ததுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி விடவும்
  5. செமிசாலிட் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  6. தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  7. தாளித்ததை கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE