Home / Recipes / Yellow Pumpkin-Moringa leaves Thuvattal

Photo of Yellow Pumpkin-Moringa leaves Thuvattal by Ayesha Ziana at BetterButter
474
8
0.0(0)
0

Yellow Pumpkin-Moringa leaves Thuvattal

Feb-21-2018
Ayesha Ziana
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yellow Pumpkin-Moringa leaves Thuvattal RECIPE

பரங்கிக்காய், முருங்கைக்கீரை மற்றும் அரைத்த மசாலா பொடி வைத்து செய்த துவட்டல் ரெசிபி. மிகவும் சுவையானது. சாதத்திற்கு ஏற்றது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பரங்கிக்காய் துண்டுகள் 1 கப்
  2. முருங்கைக்கீரை ஒரு கையளவு
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. உப்பு தேவைக்கு
  6. எண்ணெய் தேவைக்கு
  7. வறுத்துப் பொடிக்க: பச்சரிசி 1 ஸ்பூன்
  8. மிளகு 1/2 ஸ்பூன்
  9. சீரகம் 1/2 ஸ்பூன்
  10. சோம்பு 1/2 ஸ்பூன்
  11. முழு மல்லி 1/2 ஸ்பூன்
  12. காய்ந்த மிளகாய் 2

Instructions

  1. பரங்கிக்காயைச் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  2. வறுத்துப்பொடிக்கக் கொடுத்துள்ளவற்றில் அரிசியை மட்டும் வெறும் வாணலியில் வறுத்து விட்டு, மற்றவற்றைச் சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்கவும். பின்னர் மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும்.
  3. பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. அடுத்து, வேக வைத்த பரங்கிக்காய் மற்றும் மேலும் சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.
  5. பின்னர், ஆய்ந்து அலசிய முருங்கைக்கீரையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. இறுதியாக, வறுத்துப் பொடித்த பொடியைத் தேவைக்கேற்ப சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் கிளறி, பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
  7. மிகவும் சுவையான பரங்கிக்காய் முருங்கைக்கீரை துவட்டல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE