Home / Recipes / Coriander Mint Biscuit

Photo of Coriander Mint Biscuit by Ayesha Ziana at BetterButter
503
2
0.0(0)
0

Coriander Mint Biscuit

Feb-27-2018
Ayesha Ziana
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு 3/4 முதல் 1 கப்
  2. உப்பில்லாத மென்மையான வெண்ணெய் 60 கிராம்
  3. கொத்தமல்லி தழை 15
  4. புதினா இலை 12
  5. கெட்டி தயிர் 1 ஸ்பூன்
  6. பொடித்த சர்க்கரை 1/8 கப்
  7. உப்பு 1/4 ஸ்பூன் அல்லது தேவைக்கு
  8. சீரகம் 1/4 ஸ்பூன்
  9. மிளகு 8
  10. பச்சை மிளகாய் 1
  11. பேக்கிங் சோடா/பேக்கிங் பவுடர் 1 சிட்டிகை

Instructions

  1. கோதுமை மாவைச் சலித்து வெண்ணையுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
  2. சீரகம், மிளகைக் கல்லில் தட்டி பொடிக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கல்லில் சதைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பின்னர், எல்லா பொருட்களையும் கோதுமை-வெண்ணெய் கலவையுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும். மாவு பரோட்டா மாவு பதத்தில் மிதமான மென்மையுடன் இருக்க வேண்டும்.
  4. பின்னர், மாவில் இருந்து சிறு உருண்டைகள் உருட்டி, லேசாக வடை போல தட்டி, வெண்ணெய் தடவிய பேக்கிங் டின்னில் ஒவ்வொன்றின் நடுவில் இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும். விரும்பிய வடிவங்களில் குக்கீ கட்டர் பயன்படுத்தியும் கட் செய்து கொள்ளலாம்.
  5. பின்னர், 10 நிமிடங்கள் முற்சூடு செய்யப்பட்ட குக்கர்/அவனில் டின்னை வைத்து 12-15 நிமிடங்கள் பேக் செய்யவும். அடிப்பாகம் லேசாக பிரவுன் நிறம் வந்து பிஸ்கட் டின்னில் ஒட்டாமல் நகரும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சில நேரம் சீக்கிரமாகவும் வெந்து விடலாம். எனவே கவனமாக கையாளவும்.
  6. சூப்பரான கொத்தமல்லி-புதினா பிஸ்கட் தயார். இது குழந்தைகளுக்கு ஸ்கூல் ஸ்னாக்ஸ்சாக பரிமாற ஏற்றது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE