Home / Recipes / Paneer kofta gravy

Photo of Paneer kofta gravy by Radha Venkatesh at BetterButter
762
7
0.0(0)
0

Paneer kofta gravy

Mar-08-2018
Radha Venkatesh
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer kofta gravy RECIPE

பனீர் மற்றும் உருளைக்கிழங்கு வைத்து செய்யப்படும் உணவு.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Indian
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோப்தா செய்வதற்கு :
  2. பனீர் -100 கிராம்
  3. உருளைக்கிழங்கு - 100 கிராம் (வேக வைத்து மசித்துக் கொள்ளவும் )
  4. மைதா - 2 மேஜைக்கரண்டி
  5. முந்திரிபருப்பு - 5( சிறியதாக நறுக்கியது )
  6. பாதாம்பருப்பு - 5 (சிறியதாக நறுக்கியது )
  7. உலர்ந்த திராட்சை -10
  8. சிகப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  9. கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  12. க்ரேவி செய்வதற்கு:
  13. பெரிய வெங்காயம் - 2 விழுதாக அரைத்து கொள்ளவும்.
  14. தக்காளி - 2 விழுதாக அரைத்து கொள்ளவும்.
  15. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  16. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
  17. சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
  18. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  19. கரம் மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
  20. பிரஷ் க்ரிம் - 100 மில்லி
  21. கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
  22. சர்க்கரை 1 தேக்கரண்டி
  23. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கோப்தா செய்வதற்கு தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உருண்டைகளை போட்டு பொரிக்கவும்.
  4. பொன்னிறமாக வந்ததும் அவற்றை தனியாக ஒரு கிச்சன் ட்ஷ்ஷுப் தாளில் தனியாக எடுத்து வைக்கவும். பனீர் கோப்தா உருண்டைகள் தயார்.
  5. பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பட்டரை சேர்த்து உருகியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போய் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  6. பொன்னிறமாக வந்ததும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  7. இஞ்சி பூண்டு விழுது வதங்கியதும் அதில் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  8. தக்காளி விழுது நன்கு வதங்கியதும் மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  9. பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு கரம் மசாலா தூள், கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு வேகவிடவும்.
  10. மசாலா வாசனை அடங்கியதும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
  11. கடைசியாக ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  12. ஒரு பாத்திரத்தில் பொறித்த பனீர் கோப்தா உருண்டைகளை வைத்து அதன் மேல் க்ரேவியை ஊற்றி பரிமாறவும்.
  13. சுவையான பனீர் கோப்தா க்ரேவி தயார். சப்பாத்தி, ரொட்டி,நாண், நெய் சோறு, புலாவ் வகைகளுக்கு ஏற்ற க்ரேவி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE