Home / Recipes / 18 multi grain health mix

Photo of 18 multi grain health mix by Waheetha Azarudeen at BetterButter
2159
3
0.0(0)
0

18 multi grain health mix

Mar-26-2018
Waheetha Azarudeen
120 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT 18 multi grain health mix RECIPE

இதை போல சத்து வெறு எதுவும் இல்லை...இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை,மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 10

  1. ராகி 500 கிரம்
  2. கம்பு 100 கிரம்
  3. மக்கா சோளம் 100 கிரம்
  4. வெள்ளை சோளம் 100 கிரம்
  5. பச்சை பயறு 100 கிரம்
  6. சம்பா கோதுமை 100 கிரம்
  7. சிகப்பு அரசி100 கிரம்
  8. ஜவராசி 100 கிரம்
  9. சோயா பீன்ஸ்100 கிரம்
  10. பார்லி அரசி 100 கிரம்
  11. ஓட்ஸ் 100 கிரம்
  12. குதிரைவாலி அரசி 100 கிரம்
  13. பொட்டு கடலை 100 கிரம்
  14. வேர்க்கடலை 100 கிரம்
  15. பதம் 100 கிரம்
  16. ஏலக்காய் 10 கிரம்
  17. கொள்ளு100 கிரம்
  18. வெள்ளை அவுல்100 கிரம்

Instructions

  1. மக்கா சோளம் உடலுக்கு வலு கொடுக்க கூடியது.  உடலில் இருக்கும்  கொழுப்புகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  2. வெள்ளை சோளத்தில் இருக்கும் புரத சத்து, நார் சத்துக்கள் அனைத்து மலச்சிக்கல் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு தீர்வு.4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  3. ராகி கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனை உட்கொண்டால், எலும்புகள் வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும். 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  4. பார்லியில் இருக்கும் நியாஸின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை ஒட்டுமொத்தமாக குறைத்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  5. கம்பு உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  6. சோயா பீன்ஸ் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே இது பெண்களுக்கு சோயாபீன்ஸ் சிறந்த உணவாகும்.4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  7. பொட்டு கடலை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், புரதச் சத்துக் குறைபாடு நீங்கும்.4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  8. பச்சை பயறு உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  9. கொள்ளு உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலுள்ளதாகவும் அறியப்படுகிறது. தொந்தி மற்றும் இதய நோயுள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  10. குதிரை வாலி நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  11. ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவில் கொழுப்பு உள்ளது. 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  12. ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும். 2 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  13. இந்த தானியத்தில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  14. பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன. 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  15. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  16. அவுல் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. 3 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  17. கோதுமை மற்றும் சம்பா கோதுமை, இதில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு  கோரோட்டின் நியாசிக் போன்ற பல சத்துக்கள் கலந்துள்ளன. 4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  18. சிகப்பரிசி உடல் நலனுக்கு மிகவும் ஏற்ற உணவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் சிகப்பரிசியை பயன்படுத்தி உணவு தயாரிப்பது மிகவும் அரிது.4 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்
  19. ஆற வைத்து மாவு மில்லில் கொடுத்து தீர்க்கவும்
  20. வண்டு பூச்சி வராமல் தடுக்க சிறிது இலவங்கம் மேலே போடவும்
  21. கஞ்சி, புட்டு, தோசை, சப்பாத்தி , இட்லி இவை அனைத்தும் இந்த மாவில் செய்யலாம் .. அதிக சத்து நிறைந்த உணவு ..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE