Home / Recipes / Mutton kola urundai/ minced meat balls

Photo of Mutton kola urundai/ minced meat balls by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
476
9
0.0(0)
0

Mutton kola urundai/ minced meat balls

May-09-2018
Wajithajasmine Raja mohamed sait
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton kola urundai/ minced meat balls RECIPE

மட்டன் கோலா உருண்டை

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • South Indian
  • Frying

Ingredients Serving: 4

  1. மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
  2. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  3. பொட்டுக்கடலை -1/4 கப் பொடியாக்கியது
  4. தேங்காய் துருவல்- 4 தேக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
  6. பெருஞ்சீரகம் -1 தேக்கரண்டி
  7. சீரகம் -1/2 தேக்கரண்டி
  8. மிளகு -1/2 தேக்கரண்டி
  9. வரமிளகாய் -2
  10. பட்டை-1
  11. ஏலக்காய் -2
  12. கிராம்பு -2
  13. மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  14. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  15. மல்லி இலை - சிறிதளவு
  16. புதினா - சிறிதளவு
  17. கருவேப்பிலை - சிறிதளவு
  18. உப்பு - தேவையான அளவு
  19. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் அடுப்பில் கடாயை வைத்து மட்டன் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது ,சிறிதளவு உப்பு ,1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும் .
  3. மட்டன்தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
  4. மட்டன் கொத்துக்கறி நன்கு ஆறியதும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும் .தண்ணீர் தேவை இல்லை.
  5. தேங்காய் ,மிளகு ,சீரகம் ,பெருஞ்சீரகம் ,பட்டை,மிளகு ,ஏலக்காய் ,வரமிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும் .
  6. இப்பொழுது அரைத்த மட்டனுடன் அரைத்த தேங்காய் ,மிளகு ,சீரகம் விழுது,பொட்டுக்கடலை பொடி,நறுக்கிய வெங்காயம் ,மல்லி இலை,புதினா,கருவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  7. பின்பு இதனை சிறு சிறு உருண்டை களாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டை போட்டு மிதமான தீயில் பொரிக்கவும்.
  9. இரண்டுபக்கமும் நன்கு வேக வைத்து கோல்டன் ப்ரவுனாக வந்ததும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும்.
  10. இப்பொழுது சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE