Home / Recipes / Thikkadi (Rice dumplings in mutton gravy)

Photo of Thikkadi (Rice dumplings in mutton gravy) by Raihanathus Sahdhiyya at BetterButter
416
4
0.0(0)
0

Thikkadi (Rice dumplings in mutton gravy)

May-16-2018
Raihanathus Sahdhiyya
60 minutes
Prep Time
50 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Eid
  • Tamil Nadu
  • Simmering
  • Pressure Cook
  • Boiling
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. இட்லி அரிசி - 1 கப்
  2. ஆட்டுக்கறி - 1/4 கிலோ
  3. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  4. பட்டை 2, கிராம்பு 2, பிரிஞ்சி இலை 1, ஏலக்காய் 2
  5. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  6. சீரகம் -1/2 தேக்கரண்டி
  7. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  9. சின்ன வெங்காயம் - 5-7
  10. தக்காளி 1
  11. பச்சை மிளகாய் 2
  12. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  13. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  14. உப்பு - தேவைக்கு ஏற்ப

Instructions

  1. இட்லி அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து பின்னர் அரைத்து அதை தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  2. ஒரு வாணலியில் அந்த மாவை ஊற்றி இடியாப்ப மாவு பதத்திற்கு மிருதுவாக வரும் வரை கிளறவும்.
  3. கையில் சிறிது எண்ணெய் தொட்டுக் கொண்டு அந்த மாவை நன்றாக பிசைந்து அதிலிருந்து நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து உருளை வடிவில் உருட்டி இரண்டு விரல் கொண்டு அழுத்தி தட்டையாக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் சிறு சிறு தட்டைகளாக தட்டிக் கொள்ளவும்.
  4. ஒரு குக்கரில் ஆட்டுக்கறி சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பும் சேர்த்து வேக விடவும். முக்கால் வாசி வெந்தால் போதும். குழைவாக வேக விட்டுவிட கூடாது.
  5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு,, சீரகம்,மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
  6. பிறகு பச்சை மிளகாய் , பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி தக்காளியும் சேர்த்து வதங்க விடவும்.
  7. இதில் வேக வைத்த ஆட்டுக்கறியை சேர்த்து , வேக வைக்க பயன்படுத்திய நீரையும் அதில் ஊற்றி கிளறவும்.
  8. பிறகு மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  9. இந்த குழம்பில் தட்டி வைத்துள்ள கொழுக்கட்டையில் பாதியை சேர்த்து மூடி போட்டு 7-8 நிமிடங்கள் வேக விடவும். இவற்றை போட்டவுடன் கரண்டி கொண்டு கிளறிவிட கூடாது. அப்படி செய்தால் கொழுக்கட்டைகள் உடைந்து விடும் .
  10. பிறகு ஒரு கரண்டியை கொண்டு லேசாக கிளறி விட்டு மீதமுள்ள கொழுக்கட்டைகளை சேர்த்து மீண்டும் 8-10 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
  11. வெந்தவுடன் ஒரு முறை கிளறிவிட்டு, திக்கானவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  12. இது ஈத் பெருநாள் சமயங்களில் மிகவும் முக்கியமாக செய்யப்படும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE