Home / Recipes / Nagore vaada

Photo of Nagore vaada by Raihanathus Sahdhiyya at BetterButter
552
4
0.0(0)
0

Nagore vaada

May-19-2018
Raihanathus Sahdhiyya
360 minutes
Prep Time
15 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Eid
  • Tamil Nadu
  • Frying
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 8

  1. சமைத்த சோறு (சாதம்/ தாளித்த சோறு) - 1 கப்
  2. ரவை - 1/2 கப்
  3. சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பச்சரிசி - 3/4 கப்
  5. இறால் - 1/4 கப்
  6. சிறிய வெங்காயம் - 10
  7. பச்சை மிளகாய் - 3
  8. துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு
  10. எண்ணெய் - பொறிக்க

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பழைய சோற்றை எடுத்து அதில் சோடா உப்பும், ரவையும் சேர்த்து நன்றாக பிசைந்து 5-6 மணி நேரம் வைக்க வேண்டும் (நொதிப்பதற்காக) .
  2. பிறகு விரலை விட்டுப் பார்த்தால் பொதுக் என்று உள்ளே போகும். லேசாக பிசுபிசுப்பாக இருக்கும் .இது தான் சரியான பதம்.
  3. ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் இறால் சேர்த்து லேசாக வதக்கி பிறகு வெங்காயம், பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வேக விடவும்.
  4. நொதித்த சோற்றுக் கலவையில் கொரகொரப்பாக பொடித்து வைத்துள்ள பச்சரிசி (ரவை போல பொடிக்கவும் ), தயாரித்து வைத்துள்ள இறால் மசாலா சேர்த்து நன்றாக பிசையவும் .
  5. ஒரு பிளாஸ்டிக் கவர் எடுத்து அதன் மீது கொஞ்சம் தண்ணீர் தொளித்து கொள்ளவும். கையிலும் சிறிது தண்ணீர் தொட்டு விட்டு ஒரு தக்காளி அளவு கலவையை எடுத்து பிளாஸ்டிக் கவர் மீது வைத்து தட்டவும். நடுவில் பெரிய ஓட்டை விரலை வைத்து அமைக்கவும். வாடாவின் மீது ஒரு இறாலை வைத்து அழுத்தி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும் .
  6. சுவையான நாகூர் ஸ்பெஷல் வாடா தயார்... இது நோன்பு காலங்களில் மிகவும் பிரபலம் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE