வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து இட்லி/வில்லேஜ் இட்லி - தானியங்களிலிருந்து ஆரோக்கியமான ஓர் உணவு

Photo of Gramathu Idli/Village Idli- A Healthy dish from Millets by Priya Alagappan at BetterButter
1852
8
5.0(0)
0

கிராமத்து இட்லி/வில்லேஜ் இட்லி - தானியங்களிலிருந்து ஆரோக்கியமான ஓர் உணவு

Sep-02-2015
Priya Alagappan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகு - 200 கிராம்
  2. சிறிய சாமை - 200 கிராம்
  3. தினை - 200 கிராம்
  4. இட்லி அரிசி - 200 கிராம்
  5. உளுந்து - 200 கிராம்

வழிமுறைகள்

  1. எல்லா தானியங்களையும் இட்லி அரிசியையும் நன்றாகக் கழுவி ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் 6 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. உளுந்தைத் தனியாகக் கழுவி 2 மணி நேரத்திற்கு மட்டும் ஊற வைக்கவும்.
  3. கிரைண்டரைப் பயன்படுத்தி ஊறவைத்த தானிகளை முதலில் மிருதுவான மாவாக அறைத்துககொள்ளவும்.
  4. அதன் பிறகு உளுந்தை அரைத்து, 2 மாவையும் ஒன்றாகக் கலந்துவிடவும்.
  5. உப்பைச் சேர்த்து கையால் கலந்து இரவு முழுவதும் 10 மணி நேரத்திற்கு நொதிக்கவிடவும்.
  6. பிறகு மறுநாள் நொதித்த மாவு பொங்கியிருக்கவேண்டும்.
  7. வழக்கமாக இட்லித்தட்டில் ஒரு வெள்ளைத் துணியைப் பயன்படுத்தி இட்லி சமைப்பேன். துணி பயன்படுத்தாதவர்கள் பள்ளத்தில் எண்ணெய் தடவலாம்.
  8. இப்போது இட்லிக் குழியில் மாவை ஊற்றி 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  9. அப்படிச் செய்தபிறகு, இட்லி குண்டானில் இருந்து இட்லியை எடுத்து சூடாகப் பரிமாறவும்.
  10. இந்தத் தனித்துவம் மிக்க சுவையான கிராமத்து இட்லியை தேங்காய் சட்னி, கறிவேப்பிலை சட்னி, சிவப்பு மிளகாய் சட்னி, சாம்பாருடன் சூடாகப் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்