வீடு / சமையல் குறிப்பு / கேரளா சிறுபயிறு சுண்டல்

Photo of Kerala Style Green Moong Dal Sundal by Janaki Priya at BetterButter
1222
3
0.0(0)
0

கேரளா சிறுபயிறு சுண்டல்

Oct-28-2017
Janaki Priya
270 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கேரளா சிறுபயிறு சுண்டல் செய்முறை பற்றி

காலை சிற்றுண்டிக்கு கேரளா அரிசி புட்டுடன் சாப்பிட ஏற்ற அருமையான சைட் டிஷ்!!! மாலை நேரச் சிற்றுண்டிக்கும் ஏற்றது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிறுபயிறு - 1 கப்
  2. துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
  3. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  4. கடுகு - 1/2 தேக்கரண்டி
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
  6. இஞ்சி துருவல் - 1 தேக்கரண்டி
  7. சிகப்பு வற்றல் மிளகாய் -3
  8. பெருங்காயத்தூள்
  9. கறிவேப்பிலை - ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. சிறுபயிறை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  2. பின் குக்கரில் சிறுபயிறுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை குழையமால் வேக வைத்து எடுக்கவும்.
  3. பின் தண்ணீரை வடிகட்டி சிறுபயிறை சற்று நேரம் ஆற வைக்கவும்.
  4. சூடான வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், வற்றல்மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. இதனுடன் வேக வைத்த சிறுபயிறை சேர்த்து உடையாமல் மெதுவாக கலந்து விடவும்.
  6. துருவிய தேங்காயை மேலே தூவி இறக்கவும்.
  7. ஆரோக்கியமான ருசியான சிறுபயிறு சுண்டல் தயார்!!
  8. காலை சிற்றுண்டிக்கு கேரளா அரிசி புட்டுடன் சாப்பிட ஏற்ற அருமையான சைட் டிஷ்!!! சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அருமையான உணவு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்