Home / Recipes / Blooming Onion Bites

Photo of Blooming Onion Bites by Hameed Nooh at BetterButter
806
5
0.0(0)
0

Blooming Onion Bites

Nov-20-2017
Hameed Nooh
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Blooming Onion Bites RECIPE

ஆனியன் ரிங்க்ஸ் சாப்பிட்டு இருப்போம். இது அதைப் போன்ற சுவையை ஒத்தது என்றாலும் சற்று வித்தியாசமானது. குழந்தைகள் நிச்சயமாக இதன் பூப் போன்ற வடிவத்திற்காகவே விரும்புவார்கள்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • American
  • Shallow fry
  • Snacks

Ingredients Serving: 2

  1. பல்லாரி - 2 பெரியது
  2. ஆல் பர்பஸ் மாவு - 1 கப்
  3. மிளகுத்தாள் - 1 தேக்கரண்டி
  4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  5. பூண்டு பொடி - 1/2 தேக்கரண்டி
  6. ப்ரட் க்ரம்ஸ் - 1/2 கப்
  7. சோள மாவு - 1 மேசைக்கரண்டி
  8. உப்பு - சுவைக்கேற்ப
  9. பால் - 1/2 கப்
  10. முட்டை - 1
  11. எண்ணெய் - பொறிக்க

Instructions

  1. முதலில் பல்லாரியில் மேல் மற்றும் கீழ் பாகத்தை சிறிது வெட்டி தோல் நீக்கவும்.
  2. பின்பு மேல் பாகத்தை கீழாக வைத்து அதில் உள்ள நடு பாகம் பட்டும் வெட்டுப் படாமல் நான்கு சரிபாகமாக மேலிருந்து கீழாக வெட்டவும்.
  3. ஒவ்வொரு நான்கு பாகத்திற்கு மத்தியிலும் முடிந்த அளவிற்கு வெட்டி கவனமாக இதழ்களை விரித்து பூப் போல் செய்யவும்.
  4. அதனை குளிர்ந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  5. மாவில் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், பூண்டுப் பொடி,சோள மாவு, ப்ரட் கரம்ஸ் மற்றும் உப்பு போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
  6. முட்டையை பாலோடு நன்றாக அடித்து வைக்கவும்.
  7. இப்பொழுது வெங்காயத்தை ஒரு தட்டில் வைத்து மாவு கலவையை அதன் மேல் தூவவும். அனைத்து பகுதிகளிலும் உள்ளேயும் வெளியேயும் படுமாறு போடவும்.
  8. பின்பு அதனை முட்டை பால் கலவையில் முக்கவும்.
  9. மறுபடியும் மாவு பிறகு முட்டை கலவையில் தோய்த்து எடுக்கவும்.
  10. எண்ணெய்யை சூடாக்கி மிதமான தீயில் நன்கு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும். சூடாக மயோனைஸ் மற்றும் சாஸுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE