Home / Recipes / Rainbow rice bath

Photo of Rainbow rice bath by Krishnasamy Vidya Valli at BetterButter
963
4
0.0(0)
0

Rainbow rice bath

Dec-03-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rainbow rice bath RECIPE

ஏழு வகையான அரிசியை உபயோகித்து செய்யப்படும் சாத வகை இது. இதை ஒன்பாட் ஒன்மீல் ஆக செய்யலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 7

  1. வரகு அரிசி - 1 / 4 கப்
  2. தினை அரிசி - 1 / 4 கப்
  3. குதிரைவாலி அரிசி - 1 / 4 கப்
  4. சாமை அரிசி - 1 / 4 கப்
  5. பச்சரிசி - 1 / 4 கப்
  6. புழுங்கல் அரிசி/மூங்கில் அரிசி - 1 / 4 கப்
  7. சிவப்பு அரிசி - 1 / 4 கப்
  8. பொடியாக நறுக்கிய காய்கள் - 1 1/2 கப்(வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி,ஸவீட்கான், குடமிளகாய், பீன்ஸ்,காலிப்ளவர் ஏதாவது 7 வகை காய்கள்)
  9. உப்பு - 2 தேக்கரண்டி
  10. மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
  11. நெய் - 3 தேக்கரண்டி
  12. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  13. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  14. தாளிக்க: கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 ஆர்க்கு பெருங்காயம் - 2 சிட்டிகை மிளகாய் வத்தல் - 2 கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி
  15. அரைக்க தேவையானவை
  16. தக்காளி - 3
  17. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 4 தேக்கரண்டி
  18. தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
  19. பச்ச மிளகாய் - 2
  20. மிளகாய் வத்தல் - 2
  21. கிஸ்மிஸ் - 8
  22. பேரீச்சம்பழம் - 2

Instructions

  1. அரிசியை அளவு படி எடுத்துக் கொள்ளவும்
  2. அதில் பச்சரிசி புழுங்கல் அரிசி சிவப்பு அரிசி மூன்றையும் மிக்ஸியில் லேசாக திரிக்கவும்
  3. எல்லா அரிசியையும் களைந்து தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும்
  4. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  6. வெங்காயம் போட்டு வதக்கவும் பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்களை சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  8. அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து அரைக்கவும்
  9. அரைத்ததை காய்களுடன் சேர்க்கவும்
  10. ஊறவைத்த அரிசியை வடிகட்டி சேர்க்கவும்
  11. நான்கு கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்
  12. மூடிபோட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்
  13. நடுநடுவே லேசாக கிளறிக்கொள்ளவும்
  14. தண்ணீர் வற்றியவுடன் நெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  15. கொத்தமல்லி இலை தூவினால் சுவையான ரெயின்போ ரைஸ் பாத் தயார். தயிர் சாலட் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE