Home / Recipes / Methi radish sambar

Photo of Methi radish sambar by Krishnasamy Vidya Valli at BetterButter
452
4
0.0(0)
0

Methi radish sambar

Dec-22-2017
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. வெந்தய கீரை /மேத்தி லீஃப்ஸ் - 1 கப்
  2. முள்ளங்கி - 1
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. பூசணிக்காய் துண்டுகள் - 10 ( விருப்பப்பட்டால் )
  6. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  8. புளி - ஒரு சிறிய எலுமிச்சைஅளவு
  9. துவரம்பருப்பு - 1 / 2 கப்
  10. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  11. வறுத்து அரைக்க தேவையானவை :
  12. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  13. தனியா - 1 1 / 2 தேக்கரண்டி
  14. மிளகாய் வத்தல் - 6 முதல் 8
  15. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
  16. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  17. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  18. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  19. கட்டி பெருங்காயம்- ஒரு சிறிய துண்டு
  20. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி
  21. வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி
  22. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  23. மிளகாய் வத்தல் - 1
  24. பச்சமிளகாய்-1

Instructions

  1. துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைக்கவும்
  2. வறுக்ககொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  3. வெந்தய கீரை முள்ளங்கி நறுக்கி வைக்கவும்
  4. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  5. கீரை மற்றும் காய்களை தனியே தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் பச்ச வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. புளி கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்
  8. வேகவைத்த கீரை மற்றும் காய்களை சேர்க்கவும்
  9. திரித்ததை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  10. வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்
  11. கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE