Home / Recipes / Fish Mango Curry

Photo of Fish Mango Curry by Asiya Omar at BetterButter
519
3
0.0(0)
0

Fish Mango Curry

Jan-02-2018
Asiya Omar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kerala
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. மீன் - அரைக்கிலோ
  2. மாங்காய் -1 அல்லது சிறியதாக இருந்தால் 2
  3. சின்ன வெங்காயம் -100 கிராம்
  4. பச்சை மிளகாய் - 3 கீறியது
  5. இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது -தலா 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை -2 இணுக்கு.
  7. மிளகாய்த்தூள் -1 மேஜைக்கரண்டி
  8. மல்லித்தூள் -1 மேஜைக்கரண்டி
  9. மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  10. புளித்தண்ணீர் அல்லது கொடம்புளி - சிறிது( தேவைப்பட்டால்)
  11. பெரிய தக்காளி - 1
  12. உப்பு - தேவைக்கு
  13. தாளிக்க:-
  14. தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெய் - 3-4 மேஜைக்கரண்டி
  15. கடுகு,வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி
  16. சின்ன வெங்காயம பாதியாக நறுக்கியது
  17. கறிவேப்பிலை
  18. அரைக்க :-
  19. அரை கப் தேங்காய் துருவல்
  20. அல்லது அரை கப் தேங்காய்ப் பால்

Instructions

  1. மீன் துண்டுகள் சுத்தம் செய்து அலசி வைக்கவும். மாங்காய், நீள் வாக்கில் துண்டு போட்டு வைக்கவும். ஒரு சட்டியில் எண்ணெய் சூடு செய்யவும். கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. இஞ்சி பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும்.வதக்கவும்.தக்காளி சேர்க்கவும்.உப்பு சேர்த்து சிறிது வதக்கவும்.
  3. மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தேவைக்கு சிறிது தண்ணீர் விடவும். நன்கு கொதிக்கட்டும்,விரும்பினால் கொடம்புளி இரண்டு துண்டு ஊற விட்டு சேர்க்கவும்.
  4. எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் மீன் சேர்க்கவும்.அகப்பை போடக்கூடாது.
  5. மாங்காய் சேர்க்கவும்.மீன் வெந்து மேலே வரும்.தேங்காய்ப்பால் விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.
  6. நாவூற வைக்கும் சுவையான மாங்காயிட்ட மீன் கறி தயார்.
  7. மாங்காய் புளிப்பாக இருந்தால் புளி சேர்க்க தேவையில்லை.மீன் குழம்பு வைப்பது ஒவ்வொருவரும் ஒரு மாதிரி செய்தாலும் அந்தக் கைமணம் என்று ஒன்றும் உண்டு.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE