Home / Recipes / Soupy Ramen

Photo of Soupy Ramen by Subashini Krish at BetterButter
188
3
0.0(0)
0

Soupy Ramen

Mar-22-2018
Subashini Krish
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Japanese
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆட்டா நூடுல்ஸ் 2 பாக்கெட்
  2. முட்டை 2 வேக வைத்தது
  3. சிக்கன்/வெஜிடபிள் ஸ்டாக் கட்டி 2
  4. கேரட் 1
  5. பீன்ஸ் 50 கிராம்
  6. பட்டன் காளான் 100 கிராம்
  7. பெரிய வெங்காயம் 1
  8. வெங்காயத்தாள் சிறிது
  9. பூண்டு 4 பல்
  10. இஞ்சி 1/2 அங்குலம்
  11. நூடுல்ஸ் உடன் வரும் மசாலா பொட்டலம் 2
  12. நல்லெண்ணெய் 20 மில்லி
  13. சோயா சாஸ் 1/2 தேக்கரண்டி
  14. சில்லி சாஸ் 1/2 தேக்கரண்டி
  15. உப்பு சிறிதளவு

Instructions

  1. காய்கறிகளை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு,காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  3. சிறிது வதங்கியதும் சோயா,சில்லி சாஸ், சிக்கன் ஸ்டாக் கட்டிகள், உப்பு, சேர்த்து வதக்கவும்
  4. நூடுல்ஸ் கட்டிகளை உடைக்காமல் முழுதாக, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  5. நூடுல்ஸ் முக்கால் பதம் வெந்தவுடன் வடித்து கொள்ளவும். அந்த தண்ணீரை காய்கறி கலவையில் ஊற்றி கொதிக்க விடவும்.
  6. நூடுல்ஸ் உடன் வரும் மசாலாவையும்,இன்னும் ஒரு கப் தண்ணீரும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அணைத்து விடவும்.
  7. பரிமாறுவதற்கு ஒரு அகலமான கிண்ணத்தில் முதலில் வெந்த நூடுல்ஸ் சேர்க்கவும். பிறகு சூப்புடன் கூடிய காய்கறி கலவையை ஊற்றவும்.
  8. வெந்த முட்டையை பாதியாக அரிந்து மேலே வைத்து வெங்காயத்தாள் தூவி ஸ்பூன் மற்றும் போர்க் (fork) உடன் பரிமாறவும்.
  9. பரிட்ச்சைக்கு படிக்கும் நேரத்தில் சூப்புடன் கூடிய இந்த ஜப்பானிய உணவு உடனடி புத்துணர்ச்சி அளிக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE