Home / Recipes / Sweet surrul poori or pootaregulu

Photo of Sweet surrul poori or pootaregulu by Balajayasri Dhamu at BetterButter
482
4
0.0(0)
0

Sweet surrul poori or pootaregulu

May-03-2018
Balajayasri Dhamu
180 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet surrul poori or pootaregulu RECIPE

பானையில் செய்யும் ஒர் இனிப்பு பண்டம்

Recipe Tags

  • Veg
  • Hard
  • Festive
  • Andhra Pradesh
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பச்சரிசி அ புழுங்கல் அரிசி250கிராம்
  2. வெல்லம்200கிராம்
  3. முந்திரி பருப்பு5
  4. பாதாம் பருப்பு5
  5. நெய் 2ஸ்பூன்
  6. பாமாயில் 100மிலி
  7. பானை பயன்படுத்தியது
  8. 2*2காட்டன் துணி

Instructions

  1. அரிசியை கழுவி நன்றாக சுத்தம் செய்து 2மணி நேரம் ஊற வைத்து கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு நைஸாக கிரைண்டரில் அரைத்து கொள்ளவும்
  2. அரைத்த மாவு புளிக்க கூடாது அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ள வேண்டும்
  3. ரவா தோசை ஊற்றும் அளவில் இருக்க வேண்டும்
  4. 2*2வெள்ளை காட்டன் துணி எடுத்து கொள்ள வேண்டும்
  5. துணியை நன்றாக தண்ணீரில் அலசி கொண்டு ரெடி செய்து கொள்ள வேண்டும்
  6. கேஸ் ஸ்டவில் சின்ன பர்னரில் பானையை தலை கிழாக கவிழ்த்தி கொள்ள வேண்டும்
  7. அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு பானை மேற்புறத்தில் எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும்
  8. பின் பாத்திரத்தில் கரைத்து வைத்த மாவில் துணியை விரித்த மாதிரி நனைத்து பனையில் அதேபோல் தடவி விடவும்
  9. சிறிது நிமிடத்தில் அது பேப்பர் போல வரும் அதை தெலுங்கில் ரேகு என்பர் அதாவது இறகு போல
  10. இதேபோல் செய்து அனைத்து ரேகுகளை சுட்டு பத்திரமாக ஒரு அட்டை பெட்டி யில் வைத்து கொள்ள வேண்டும்
  11. இப்போது உள்ளே வைக்கும் வெல்லம் பூரணம் வெல்லம் பொடி செய்து கொள்ள வேண்டும்
  12. முந்திரி பாதாம் நெய்யில் வறுத்து கொள்ளவும்
  13. மூன்றையும் மிக்ஸியில் இட்டு அரைத்து கொள்ளவும் பூரணம் ரெடி
  14. தயார் செய்த ரேகு அ இறகு 2எடுத்து கொள்ள வேண்டும் அதில் நெய் தடவி கொண்டு பூரணத்தை அதில் சேர்த்து
  15. அதை இரண்டாக மடிக்கவும்
  16. மிண்டும் அதை மடிக்கவும்
  17. தற்போது ரெடி
  18. தற்போது சுவையான இனிப்பான வெல்லம் சுருள் பூரி அ போத்ரேகுலு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE