Home / Recipes / Minced meat balls

Photo of Minced meat balls by Nancy Samson at BetterButter
228
2
0.0(0)
0

Minced meat balls

May-10-2018
Nancy Samson
25 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Frying
  • Appetizers

Ingredients Serving: 6

  1. மட்டன் கொத்துகரி - 250 கிராம்
  2. பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
  3. நறுக்கிய கொத்தமல்லி தழை - 3 மேசைக்கரண்டி
  4. அரைக்க வேண்டிய பொருட்கள்:
  5. துருவிய தேங்காய் - 1/2 கப்
  6. நறுக்கிய வெங்காயம் - 1
  7. இஞ்சி - 1 இன்ச் துண்டு
  8. பூண்டு- 6 பல்
  9. பட்டை - 1 இன்ச் துண்டு
  10. கிராம்பு -1
  11. ஏலக்காய் - 1
  12. சோம்பு - 1 தேக்கரண்டி
  13. கசகசா - 1மேசைக்கரண்டி
  14. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  15. தனியா தூள் - 1 தேக்கரண்டி
  16. பச்சை மிளகாய் - 3
  17. உப்பு - தேவையான அளவு
  18. எண்ணெய் - பொரிப்பதற்கு

Instructions

  1. அடுப்பில் ஒரு வாணலி வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதாக்கிக்கொள்ளவும்.
  2. வதக்கிய பொருட்களை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
  3. ஆறிய மசாலா பொருட்களை சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  4. மட்டன் கொத்துகரியில் கொழுப்புகளை முற்றிலுமாக அகற்றி விடவும்.
  5. சுத்தம் செய்த கொத்துகறியை, ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் தண்ணீர் ஊற்றாமல் வதக்கவும்.
  6. நன்கு வெந்ததும் , ஆறவைத்து பின் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் , அரைத்த மட்டன் கொத்துகரி, அரைத்த மசாலா, பொட்டுக்கடலை மாவு, உப்பு , நறுக்கிய வெங்காயம் , நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
  8. கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும்.
  9. இதனை குளிர்சாதன பெட்டியில் 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
  10. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தீயில் உருண்டைகளை பொரித்து எடுக்கவும்.
  11. உருண்டைகளை எண்ணெயில் இட்டதும் கரண்டியில் திருப்பம், சிறிது வெந்ததும் திருப்பவும். இல்லையெனில் உருண்டைகள் உடைந்து விடும்.
  12. கொத்தமல்லி தயிர் சாட் சட்னியுடன் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE