வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் அரிசி பாயசம்

Photo of Coconut rice kheer / payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
432
5
0.0(0)
0

தேங்காய் அரிசி பாயசம்

Jan-12-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் அரிசி பாயசம் செய்முறை பற்றி

எளிதில் செய்யப்படும் பாயாசம் வெரைட்டி இது. போகி பண்டிகையன்று இனிப்பு வகைக்கு போளி செய்துவிட்டு ஏதாவது ஒரு பாயாசம் செய்வார்கள். அதற்கு இந்த பாயாசம் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பச்சரிசி - 1 / 2 மேஜைகரண்டி
  2. தேங்காய் துருவல் - 1 / 2 மேஜைகரண்டி
  3. வெல்லம் - 1 1 / 2 மேஜைகரண்டி
  4. பால் - 100 மில்லி லிட்டர்
  5. ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  6. நெய் - 1 / 2 தேக்கரண்டி
  7. கிஸ்மிஸ்/முந்திரி - 6 முதல் 8

வழிமுறைகள்

  1. பச்சரிசியை களைந்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. தேங்காய் துருவல் மற்றும் ஊறவைத்த அரிசி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  3. கடாயில் நெய் விட்டு கிஸ்மிஸ்/முந்திரி வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
  4. அதே கடாயில் வெல்லம் மற்றும் அரை மேஜைகரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளலாம்
  6. அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  7. அரைத்த விழுது நன்றாக வெந்ததும் (பச்ச வாசனை போனவுடன் ) ஏலக்காய் பொடி போட்டு பால் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
  8. ஏற்கனேவே வறுத்த கிஸ்மிஸ்/முந்திரி சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்