Home / Recipes / Butter scotch milk pudding

Photo of Butter scotch milk pudding by Radha Venkatesh at BetterButter
725
5
0.0(0)
0

Butter scotch milk pudding

Mar-07-2018
Radha Venkatesh
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter scotch milk pudding RECIPE

செய்முறை

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 8

  1. பட்டர் - 100 கிராம்
  2. பால் - 1 லிட்டர்
  3. சர்க்கரை - 250 கிராம்
  4. மில்க் மெய்டு - 100 கிராம்
  5. முந்திரிபருப்பு - 15
  6. அகார்அகார் - சிறிதளவு

Instructions

  1. முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 2 மேஜைக்கரண்டி சர்க்கரை & 1 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை சூடாக்கவும். ( கேரமல் ஆக காய்ச்சவும்.)
  3. பொன்னிறமாக வந்ததும் முந்திரிபருப்பு சேர்த்து பிரவுன் கலராக வரும் வரை வறுக்கவும்.
  4. வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை ஒரு தட்டில் பட்டர் தடவி தயாராக வைக்கவும். பிறகு அந்த கேரமல் முந்திரி பருப்பு கலவையை கொட்டி ஆற விடவும்.
  5. ஆறியதும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
  6. அதே கடாயில் மீதமுள்ள சர்க்கரை & 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து பிரவுன் கலராக வரும் வரை சூடாக்கவும். ( கேரமல் ஆக காய்ச்சவும்.)
  7. அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் பொங்கி வரும் பொழுது 100 கிராம் பட்டரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  8. பட்டர் நன்றாக உருகி பாலில் கலந்ததும் சிறிது சிறிதாக கேரமல் கலவையில் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். கேரமல் கட்டியாகி விடாமல் இருக்க நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
  9. பத்து நிமிடம் கழித்து மில்க் மெய்டு சேர்த்து கலக்கவும்.
  10. மற்றொரு பாத்திரத்தில் அகார்அகார் ஐ போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து உருக்கவும்.
  11. பால் பட்டர் கேரமல் கலவை பாதியாக வற்றியதும் அகார்அகார் கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
  12. இப்போது பால் நன்கு திக்காக வரும். இதில் பொடித்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்து நன்கு கலக்கவும்.
  13. அடுப்பை அணைத்து விடவும். உடனடியாக பட்டர் ஸ்காட்ச் மில்க் புட்டீங் கலவையை வேறு கண்ணாடி ட்ரேயில் அல்லது சாதாரண விஷயம் தட்டில் ஊற்றி ஆற விடவும்.
  14. நன்கு ஆறியதும் ட்ரேயை ப்ரிஜில் 2 மணிநேரம் வைத்து செட் ஆக விடவும்.
  15. இரண்டு மணி நேரம் கழித்து ப்ரிஜில் இருந்து வெளியே எடுக்கவும். சுவையான பட்டர் ஸ்காட்ச் மில்க் புட்டீங் தயார்.
  16. துண்டுகளாக்கி பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE